ஆத்திரமூட்டும் பாடலுக்கு நடனமாடிய மணப்பெண்!! மணமேடையிலேயே விவாகரத்து செய்த மணமகன்...

நடனமாடிய மணப்பெண்ணை விவாகரத்து செய்த மணமகன்....

ஆத்திரமூட்டும் பாடலுக்கு நடனமாடிய மணப்பெண்!! மணமேடையிலேயே விவாகரத்து செய்த மணமகன்...

'நான் ஆதிக்கம் செலுத்துவேன்' என்று அர்த்தம் கொண்ட பாடலுக்கு மணப்பெண் நடனமாடியதால் திருமணத்தன்றே மணமகன்  விவாகரத்து செய்த சம்பவம் ஈராக்கின் தலைநகரான  பாக்தாத்தில் அரங்கேறியுள்ளது.

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் மணப்பெண் ஒருவர் திருமணத்தன்று 'மெசைதரா' என்ற சிறிய பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார். இந்தப் பாடலின் முதல் பகுதிக்கு 'நான் ஆதிக்கம் செலுத்துவேன்; என்னுடைய கண்டிப்பான அறிவுறுத்தல்களின்படி நீ ஆளப்படுவாய்; என்னுடன் நீ இருக்கும் நாள் வரையிலும் என்னுடைய கட்டளைகளின்படி நடப்பாய். நான் திமிரானவள்' என்று அர்த்தம்.

இப்படி அர்த்தங்கள் நிறைந்த இந்தப் பாடலுக்கு மணப்பெண் நடனமாடியதை அடுத்து கோபமடைந்த மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மணப்பெண்ணின் குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதையடுத்து மணமகன் திருமணத்தன்றே மணப்பெண்னை விவாகரத்து செய்துள்ளார்.

இதே போன்ற நிகழ்வு கடந்த 2021-ம் ஆண்டில் ஜோர்டானில் நடைபெற்றது. அங்கு மணப்பெண் ஒருவர் மணமகன் தன்னுடைய கைகளில் முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை இந்த 'மெசைதரா' பாடலுடன் இணைத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதற்காக மணமகன் விவாகரத்து செய்திருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது ஈராக்கில் நடைபெற்றுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.