தூக்கத்தில் குற்றம் செய்ததை உளறிய மனைவி! போலீசில் மாட்டி விட்ட புத்திசாலி கணவன்!

மனைவி தூக்கத்தில் தான் செய்த குற்றங்களை உளறியுள்ளார்.இதனை கவனித்த கணவன் மனைவியை போலீசிடம் காட்டிக் கொடுத்து புகார் அளித்துள்ளார்.

தூக்கத்தில் குற்றம் செய்ததை உளறிய மனைவி! போலீசில் மாட்டி விட்ட புத்திசாலி கணவன்!

சிலர் ஆழ்ந்த உரகத்தின் போது பல்வேறு விஷயங்களை உளறுவது வழக்கம்.அந்த வகையில் வீல் சேரின் உதவியோடு இருந்து வரும் மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு உதவியாளராக பணிப்பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார்.பணிப்பெண் தனது எஜமானிடம் இருந்து பணத்தை திருடியதாக அந்த பெண் தூக்கத்தில் உளறியுள்ளார் அந்த பணிப்பெண்.அதைக்கேட்டு அதிர்ச்சியான பணிப்பெண்ணின் கணவன் போலீசாரிடத்தில் புகார் அளித்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆண்டனி மற்றும் ரூத் என்பவர் 2008 ஆம் ஆண்டின் போது சந்தித்து 2010 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.மேலும் இவர் தான் வேலை செய்யும் இடத்திலிருந்து இந்திய மதிப்பில் 7,31,032 ரூபாயைத் ரூத் திருடியுள்ளார். அதனை தற்போது தூக்கத்தில் உளறியுள்ளார். அதனை அறிந்து கொண்ட கணவனுக்கு முதலில் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் அதனால் அவருடைய குற்ற செயலுக்கு தகுந்த தண்டனையை அவர் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவரது கணவர் தனது மனைவி அதிக பணம் செலவழித்து வந்தது குறித்து சந்தேகம் இருந்ததாக கூறினார்.தற்போது 47 வயதான ரூத் விற்கு 16 மாத காலம் சிறைவாசம் அனுபவிக்குமாறு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.