குண்டாக இருப்பதாக கூறி  வேலையை விட்டு நீக்கிய நிறுவனம்: 3ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி...

குண்டாக இருப்பதாக கூறி ஒருவரை வேலையை விட்டு நீக்கிய சம்பவம் ஆஸ்திரேலியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குண்டாக இருப்பதாக கூறி  வேலையை விட்டு நீக்கிய நிறுவனம்: 3ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி...

ஹமிஷ் கிரிஃப்பின் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் பகுதியில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.இந்நிலையில், டாஸ்மனியாவில் உள்ள வேறொரு கேளிக்கை விடுதியில் சற்று ஊதியம் கூடுதலாக அதே மேலாண்மை பணி கிடைத்துள்ளது.இதனை அடுத்து, குயின்ஸ்லேண்ட்டிலிருந்த குடியிருப்பை காலி செய்துகொண்டு தன் மகன் மற்றும் மனைவியுடன் சுமார் 3000 கிலோமீட்டர் தூரமுள்ள டாஸ்மானியாவிற்கு பயணமாகியுள்ளார். ஆனால், புதிய வேலையை தொடங்குவதற்காக சென்றவருக்கு காத்திருந்தது அதிர்ச்சி.

நேர்காணல் ஆன்லைனில் நடந்த காரணத்தால், முதன்முறையாக கிரிஃப்பினை நேரில் கண்ட விடுதி உரிமையாளர், இவர் இந்த பணிக்கு ஒத்துவரமட்டார் என கூறி, வேலைக்கு வந்த இரண்டு மணி நேரத்திலேயே வேலை விட்டு நீக்கி விட்டார். இதனால் மனமுடைந்த கிரிஃப்பின் கடும் வேதனைக்கு ஆளாகியுள்ளார். 8 வருட கால பணி அனுபவம் கொண்ட கிரிஃப்பின், தன் குடும்ப்ம் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்து அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.