ஊகானில் தான் கொரோனா பரவியது : சிக்கும் சீனா

ஊகான் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் கசிந்தது என்ற குற்றச்சாட்டு மீண்டும் எழுந்திருப்பது பற்றி ஒரு ஆய்வுக்கட்டுரை வெளியாகி உள்ளது.

ஊகானில் தான் கொரோனா பரவியது : சிக்கும் சீனா

ஊகான் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் கசிந்தது என்ற குற்றச்சாட்டு மீண்டும் எழுந்திருப்பது பற்றி ஒரு ஆய்வுக்கட்டுரை வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் சீனாவின் ஊகான் நகரில் உள்ள மாமிச உணவுப்பொருட்கள் சந்தையில் இருந்துதான் 2019-ம் ஆண்டு இறுதியில் பரவியதாக தகவல்கள் வெளிவந்தன.ஆனால், உகான் ஆய்வுக்கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிய விடப்பட்டதாக அமெரிக்காவில் டிரம்ப் அதிபராக இருந்த போது பரபரப்பு தகவல் வெளியிட்டு அதிர வைத்தார். இதை சீனா நிராகரித்தது.  இந்த நிலையில், கொரோனா வைரஸ் உண்மையிலேயே தோன்றியது எங்கே என்பதை கண்டறிய அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடன் அதிரடியில் இறங்கினார். இது குறித்த தகவல்களை சேகரித்து, 90 நாளில் வழங்குமாறு கடந்த மாத கடைசியில் அவர் அமெரிக்க உளவு அமைப்புக ளுக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து ஊகான் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் கசிந்தது என்ற டிரம்ப் குற்றச்சாட்டு, மறுபடியும் வலுப்பெறத் தொடங்கி உள்ளது. இதை டிரம்ப் ஆதரவாளர்கள் சாதகமாக எடுத்துக்கொண்டுள்ளனர்.  இதுபற்றி ‘கான்வர்சேஷன்’ என்ற இணைய தளத்தில் ஒரு ஆய்வுக்கட்டுரை வெளியாகி உள்ளது.  அதில் ஊகான் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியது என சுமார் 30 சதவீத அமெரிக்கர்கள் நம்புவதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.  

ஊகான் ஆய்வுக் கூட ஆராய்ச்சியாளர்கள் உடல்நலக்குறைவால் 2019 நவம்பரில் மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்டதாக அமெரிக்க உளவு தகவல்கள் சொல்கின்றன. இது உண்மையானால், புதிய ஆதாரமாக அமைகிறது.என  கூறப்பட்டுள்ளது