மக்களுக்கு லாட்டரியில் பரிசு தொகை அறிவித்து தடுப்பூசி செலுத்தும் நாடு!!

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்குவிப்பதாக லாட்டரியில் பரிசு அறிவித்துள்ளது ஆஸ்திரேலியா.

மக்களுக்கு லாட்டரியில் பரிசு தொகை அறிவித்து தடுப்பூசி செலுத்தும் நாடு!!

ஆஸ்திரேலியாவில் மக்கள் தொகை சுமார் 72 சதவீத மக்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது.ஆனால் மேற்கு ஐரோப்பிய நாடுகளை ஒப்பிட்டு பார்க்கையில் ஆஸ்திரேலியா குறைந்த அளவிலேயெ தடுப்பூசி செலுத்தியுள்ளது தெரிய வந்தது.இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசு பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஊக்குவிக்கும் பொருட்டு லாட்டரி சீட்டை  அறிமுகப்படுத்தியுள்ளது.ஒமைக்ரான் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆஸ்திரேலியா அரசானது மற்றொரு ஊரடங்கை தவிர்க்கும் பொருட்டு இப்படிப்பட்ட ஏற்பாடுகளை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

பொதுமக்கள் ஏற்கெனவே தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தாலும் இனி தடுப்பூசி செலுத்துபவராக இருந்தாலும் ஒவ்வொரு டோஸ் தடுப்பூசிக்கும் ஒரு லாட்டரி டிக்கெட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூஸ்டர் டோஸ் செலுத்துபவர்கள் 3 லாட்டரி டிக்கெட்டுகள் பெற்றுக்கொள்ள முடியும். ஒவ்வொரு பத்தாவது லாட்டரி டிக்கெட்டுக்கும் 500 யூரோக்கள் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 42 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது.

மேலும் ஆஸ்திரியா அடுத்த மாதம் முதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியுடைய அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை கட்டாயமாக்க உள்ளது. இதற்கான மசோதா இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.