கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு வெள்ளை எலிகளை பறிமுதல் செய்யும் நாடு!!

ஹாங்காங்கில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வெள்ளை எலிகளை பறிமுதல் செய்து வருவதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு வெள்ளை எலிகளை பறிமுதல் செய்யும் நாடு!!

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஹாங்காங்கில் வெள்ளெலிகளை பறிமுதல் செய்வதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கொரோனோ பரவலை தொடர்ந்து ஹாங்காங்கில் உள்ள பல இடங்களில் வெள்ளை எலிகளை ஒப்படைக்க வேண்டும் என வனவிலங்கு தறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வெள்ளை எலிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து விலங்கிட ஆர்வலர்கள் பலர் திரண்டு எலிகளுடன் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்கள் அதிகாரிகளை வழிமறித்து வெள்ளை எலிகளால் தொற்று பரவும் வாய்ப்பு இல்லை என விளக்கம் அளித்துள்ளனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில்  பரபரப்பு நிலவியதாக சொல்லப்படுகிறது.