ஏளனப்படுத்திய மகிந்திரா கார் நிறுவன விற்பனை பிரதிநிதிக்கு - சவால் விட்ட விவசாயி !!

விவசாயி ஒருவர் தன்னை இழிவுப்படுத்திய மகிந்திரா காரின் பிரதிநிதிக்கு சவால் விட்டு மொத்த பணத்தை கொடுத்து வாகனம் வாங்கியுள்ளார்.

ஏளனப்படுத்திய மகிந்திரா கார் நிறுவன விற்பனை பிரதிநிதிக்கு - சவால் விட்ட விவசாயி !!

கர்நாடகாவில் தன்னை ஏளனப்படுத்திய மகிந்திரா கார் நிறுவன விற்பனை பிரதிநிதியிடம், மொத்த பணத்தையும் செலுத்தி வாகனத்தை வாங்கி விவசாயி ஒருவர் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.

கர்நாடகாவை சேர்ந்த கெம்பகவுடா என்ற விவசாயி அண்மையில் பொலிரோ வாகனம் வாங்குவதற்காக அங்குள்ள மகிந்திரா ஷோரூமுக்கு சென்றுள்ளார். ஆனால் அவரது நடை, உடையை கண்டு ஏளனம் செய்த விற்பனை பிரதிநிதி, பாக்கெட்டில் 10 ரூபாய் கூட இல்லாமல் கார் வாங்க வந்து விட்டாயா என இழிவுப்படுத்தியுள்ளார். ஆனால் சற்றும் மனந்தளராத கெம்பகவுடா, ஒரு மணி நேரத்தில் மொத்த பணத்துடன் திரும்ப  வருவேன் என்றும்,  வாகனத்தை   தயாராக வைத்து கொள்ளும்படியும் கூறி சவால் விட்டு சென்றுள்ளார். அதேபோல் கெம்பகவுடா திரும்பி வந்து  முழு பணத்தைளும் செலுத்தி வாகனத்தை வாங்கி சென்ற வீடியோ இணையத்தில் வைலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை மகிந்திர குழும தலைவர் ஆனந்த் மகிந்திராவிற்கு பகிர்ந்துள்ளனர்.