சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பி வருவோருக்கு 5 ஆண்டுகள் சிறை - உத்தரவு பிறப்பித்த அரசு!

சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பினால் 5 ஆண்டு கால சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படும் என சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பி வருவோருக்கு 5 ஆண்டுகள் சிறை - உத்தரவு பிறப்பித்த அரசு!

சமுக ஊடகங்களில் ஆதாரமற்ற வதந்திகளை பரப்பி வருவது அதிகமாக நடைபெற்று வருவதால் சமூகம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

சவுதி அரேபியாவில் பொங்கல் பண்டிகை அன்று தலைநகரான ரியாத்தின் புறநகர் பகுதியில் கே-பாப் என சொல்லப்படும் இசைக்குழுவின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த நிகழ்ச்சிக்காக மக்கள் பெரிதும் எதிர்பார்த்து வந்ததாக சொல்லப்படுகிறது.ஆனால் எதிர்பாரத விதமாக பலத்த காற்று வீசியதால் நிகழ்ச்சி ரத்தானது.இதனை தொடர்ந்து இசை நிகழ்ச்சியை பார்க்க வந்த ஏராளமான மக்கள் மைதனாத்தில் இருந்து வீட்டிற்கு திரும்ப முடியாத நிலையில் தத்தளித்து வந்ததாக கூறப்பட்டது.இந்த நிகழ்வை சமூக ஊடகங்கள் சிறுமிகள் காணமல் போனதாகவும் அவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவதாகவும் தவறான தகவல்கள் வெளியிட்டது தொடர்ந்து அது பெரும் சர்ச்சையாக மாறியது.மேலும் இந்த செய்திகள் பெருமளவில் பேசப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.

இதனை பற்றி சிலர் கருத்து தெரிவிக்கையில் இது போன்ற சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை எனவும் இக்கட்டனா சூழ்நிலையிலும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குழுக்கள் சிறப்பாக தங்களை பாதுகாத்து வந்ததாகவும் நெரிசலில் சிக்கியவர்கள் கூறியுள்ளனர்.இதனை தொடர்ந்து சவுதி அரேபியாவின் பொழுதுபோக்கு தலைவரான துர்கி ஆல் ஷேக் பெண்கள் துன்புறுத்தல் பற்றிய வெளியான செய்திகள் அனைத்தும் தவறானவை என ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தவறான பதிவுகளை வெளியிட்டவர்கள் அச்சுறுத்தல் காரணமாக கணக்குகளை மூடிவிட்டதாக தகவல்கள் வெளியாகின.இதனை தொடர்ந்து சமூக ஊடகங்களில் தவறான செய்திகளை ஆதாரம் இன்றி வெளியிட்டு வருவதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு அதிரடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள இறங்கியதாக கூறுகின்றனர்.

இதற்கு மேல் யாரேனும் உரிய ஆதாரம் இன்றி தவறான செய்திகளை சமூக ஊடக பக்கங்களில் வதந்தி பரப்பி வந்தால் அவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அளிக்கப்படும் அதனுடன் பெரிய அளவிலான தொகையை அபராதமாக வழங்கப்பட வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளது.மேலும் இது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.