திருமணத்தன்று மணமகள் நடனமாடியதால்...விவாகரத்து கேட்ட மணமகன்!

நான் ஆதிக்கம் செலுத்துவேன் என்ற பாடலுக்கு மணமகள் நடனமாடியதால் விவாகரத்து செய்த மணமகன்.

திருமணத்தன்று மணமகள் நடனமாடியதால்...விவாகரத்து கேட்ட மணமகன்!

ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் நடைபெற்ற திருமணத்தில் மணப்பெண் ஒருவர் நான் ஆதிக்கம் செலுத்துவேன் என அர்த்தம் கொண்ட பாடலுக்கு நடமாடியதால் திருமணத்தன்றே விவாகரத்து செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

மணப்பெண் ஒருவர் மெசைதரா என்ற பாடல் ஒன்றுக்கு நடனமாடியதாக சொல்லப்படுகிறது.இந்த பாடலின் முதல் பகுதியில் நான் ஆதிக்கம் செலுத்துவேன் என்னுடைய கண்டிப்பான அறிவுறுத்தல்கள் படி நீ ஆளப்படுவாய், என்னுடன் நீ இருக்கும் நாள் வரையிலும் என்னுடைய கட்டளைகளின் படி நீ நடப்பாய். நான் திமிரானவள் என அர்த்தம்.

மேலும் இந்த பாடலின் வரிகளை கவணித்த மணமகனின் வீட்டார் மணமகளின் வீட்டாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.இதனை தொடர்ந்து மணமகன் திருமணம் நடைபெற்ற அத்தினத்தன்றே மணப்பெண்ணை விவாகரத்து செய்துள்ளார்.மேலும் இது போன்று 2021 ஆம் ஆண்டின் போது ஜோர்டானில் மணப்பெண் ஒருவர் மணமகன் கைகளுக்கு முத்தமிடும் புகைப்படம் ஒன்றை இந்த பாடலுடன் சமூக வலைதளங்களில் வெளியிட்டதற்காக என்பது மணமகனின் விவாகரத்திற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.