நடுவானில் பறக்கப்பட்ட விமானம் - முகக்கவசம் அணியாத பயணியால் புறப்பட்ட இடந்திற்கே மீண்டும் திரும்பிய சம்பவம்!

நடுவானில் பறக்கப்பட்ட விமானம் முகக் கவசம் அணியாத பயணியால் மீண்டும் தரைக்கு திருப்பப்பட்டுள்ளது.

நடுவானில் பறக்கப்பட்ட விமானம் - முகக்கவசம் அணியாத பயணியால் புறப்பட்ட இடந்திற்கே மீண்டும் திரும்பிய சம்பவம்!

விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் முகக்கவசம் அணிய மறுத்துள்ளார்.இதனால் மியாமியிலிருந்து லண்டனுக்கு பயணித்த அமெரிக்க ஜெட்லைனர் விமானம் மீண்டும் அவசரமாக மியாமிக்கே திருப்பி விடப்பட்டுள்ளது. 

இந்த விமானத்தில் 129 பயணிகள் மற்றும் 14 ஊழியர்களுடன் விமானம் ஒன்று மியாமர் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்டதாக சொல்லப்படுகிறது.விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த நிலையில் அதில் பயணித்த ஒருவர் மட்டும் முகக்கவசம் அணியாததாக கூறப்படுகிறது.விமான ஊழியர்கள் அவரிடம் கேட்டுக் கொண்ட பொதும் அதனை மறுத்து வந்ததாக சொல்லப்பட்டுள்ளது. இதனால் வேறு வழியின்றி விமானி விமானத்தை மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திருப்பியுள்ளார்.

விமானம் தரையிறங்கிய நிலையில் காவல்துறையினர் அனைத்து பயணிகளையும் பாதுகாப்பாக அழைத்து சென்றுள்ளனர்.மேலும் முகக்கவசம் அணிய மறுத்த பயணியை தடை செய்யப்பட்ட பயணிகளின் பட்டியலில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.