இறந்தவரின் பெயரில் வந்த கடிதம்!...76 ஆண்டுகளுக்கு பின் மகிழ்ச்சியில் ஆழ்ந்த குடும்பம்!

அமெரிக்காவில் 76 ஆண்டுகளுக்கு முன்னதாக எழுதப்பட்ட மகனின் கடிதத்தை பார்த்துவிட்டு அதிர்ச்சியடைந்த குடும்பம்.

இறந்தவரின் பெயரில் வந்த கடிதம்!...76 ஆண்டுகளுக்கு பின் மகிழ்ச்சியில் ஆழ்ந்த குடும்பம்!

அமெரிக்காவில் இறந்தவரின் பெயரில் 76 ஆண்டுகளுக்கு முன்னதாக எழுதப்பட்ட கடிதம் டெலிவரி செய்யப்பட்டதை கண்டு குடும்பத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியின் உச்சியில் நின்றுள்ளனர்.ஜான் கோன்சலஸ் என்பவர் இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த காலத்தில் அமெரிக்க ராணுவத்திற்காக ஜெர்மனியில் போரிட்டுக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

அவ்வப்போது அவர் போர் முடியும் காலக்கட்டத்தில் தனது தாயாருக்கு 22 வயதில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அந்த கடித்ததில் அன்புக்குரிய அம்மா தங்களின் கடிதத்தை பெற்றுக்கொண்டேன் அங்கு அனைவரும் நலமாக இருப்பது மகிழ்ச்சியை தருகிறது.நானும் இங்கு நலமாக இருக்கிறேன் இங்கு எனக்கு உணவில் மட்டும் தான் பற்றாக்குறை உள்ளதாகவும் தங்களை நான் விரைவில் சந்திப்பேன் என நம்புகிறேன் அன்புடன் உங்கள் மகன் ஜான் என எழுதி முடித்துள்ளார்.

இந்த கடிதமானது 1947 ஆம் ஆண்டின் போது அவர் எழுதியது குறிப்பிடத்தக்கது.இந்த கடிதமானது அவர் எழுதிய பின்பு 76 வருடங்கள் கழித்து அவரது குடும்பத்தாருக்கு கிடைத்திருப்பது நெகிழ்ச்சியான தருணத்தை உருவாக்கியுள்ளது.கடிதம் எழுதிய ஜான் கடந்த 2015 ஆம் ஆண்டின் போது உயிரிழந்து விட்டதாக சொல்லப்படுகிறது.மேலும் இது குறித்து அவரது மனைவி ஏஞ்சலினா ஜோலி கூறியபோது இதை என்னால் நம்ப முடியவில்லை அவருடைய கையெழுத்துக்களை காண்பது அற்புதமான உணர்வை தருவதாகவும் அவர் மீண்டும் தனக்கு கிடைத்து  விட்டது போன்ற உணர்வை இந்த கடிதம் அளித்திருப்பதாக நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.