சம்பள பணத்திற்கு பதிலாக கோதுமையை கொடுக்கும் பரிதாப நிலை!

பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லாத காரணத்தால் சம்பளமாக கோதுமை கொடுக்கப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சம்பள பணத்திற்கு பதிலாக கோதுமையை கொடுக்கும்  பரிதாப நிலை!

இதில் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் வேலை பார்த்து வந்தால் அதற்கு சம்பளமாக 10 கிலோ கோதுமை வழங்கப்படும் எனவும் 40000 ஊழியர்களுக்கு இதுவரை கோதுமை சம்பளம் அளிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.மேலும் இந்த திட்டத்தினை நாடு முழுவதும் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சியில் நெருக்கடி உச்சத்தை தொட்டு வரும் நிலையில் பணியாளர்களுக்கு சம்பளமாக கொடுக்க போதிய பணம் இல்லாத காரணத்தால் ஆளுக்கு 10 கிலோ கோதுமையினை கொடுக்க ஆரம்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.ஆப்கானிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசானது விரட்டியடிக்கப்பட்ட நிலையில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது முதல் சிரமத்தோடு ஆட்சியை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதனை தொடர்ந்து மற்ற நாடுகள் ஆப்கானிஸ்தான் மீது பொருளாதாரத் தடை விதித்து இருப்பதால் சர்வதேச பக்கத்தில் இருந்து வந்து கொண்டிருந்த உதவிகளும் நின்று போன நிலையில் தற்போது பாகிஸ்தான் தான் உதவி செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

பொருளாதார நெருக்கடியானது உச்சத்தை தொட்ட நிலையில் பணியாளர்களுக்கு  சம்பளம் கொடுக்க கூட பணம் இல்லாத நிலைமைக்கு தாலிபான்களின் ஆட்சி தள்ளப்பட்டுள்ளதாக சொல்கின்றனர்.இப்படிப்பட்ட சூழலில் வேலை பார்த்தால் பணம் கிடையாது..அதற்கு மாறாக கோதுமை என்ற புதிய திட்டத்தை மக்களிடையே அறிமுகப்படுத்தியுள்ளது.மேலும் இவர்கள் சம்பளம் என்ற அடிப்படையில் கொடுத்து வரும் கோதுமையானது இந்தியா தானமாக கொடுக்கப்பட்ட கோதுமை என்பது குறிப்பிடத்தக்கது.முன்னதாக மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கு இந்தியா தானமாக வழங்கிய கோதுமையின் நிலுவையிலிருந்து தற்போது சம்பளமாக கொடுக்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.முதற் கட்டமாக 40,000 அரசுப் பணியாளர்களுக்கு இந்த கோதுமையை சம்பளமாக கொடுத்து வந்ததாக தாலிபான்களின் விவசாயத்துறை அதிகாரிகளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இதனை தொடர்ந்து இந்த திட்டத்தினை தற்போது நாடு முழுவதும் அமல் படுத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனிடையில் பாகிஸ்தான் 18 டன் கோதுமையை அனுப்பி உள்ளதாகவும்,இன்னும் 37 டன் கோதுமை வழங்கப்படும் என பாகிஸ்தான் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும் இதனை தவிர இந்தியாவிடம் இருந்து 55 டன் கோதுமையை  வாங்குவது குறித்து தாலிபான்கள் பேச்சு வார்த்தை நடத்தி  வருவதாக சொல்லப்படுகிறது.ஆப்கானிஸ்தானின் வங்கிக் கணக்குகள் சர்வதேச நாடுகள் முடக்கி வைத்துள்ளதால் வருவாய் மற்றும் செலவு செய்ய பணம் இல்லாமல் தவித்து  வருகின்றது.சர்வதேச உதவிகள் நின்று போன நிலையில் நாட்டை நிர்வாகிப்பதில் பெரும் சிக்கல் ஏற்ப்பட்டதாக சொல்லப்படுகிறது.அமெரிக்க படையினர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய நிலையில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி பொறுப்பில் அமர்ந்து கொண்டதாகவும் தற்போது இதனால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.