ஷிஃப்ட் முடிஞ்சு போச்சு! விமானத்தை ஓட்ட முடியாது என அடம்பிடிக்கும் விமானி...கதறும் பயணிகள்!

வேலை நேரம் நிறைவடைந்துவிட்டதாக கூறிய விமானி மேற்கொண்டு விமானத்தை இயக்க முடியாது என அடம்பிடித்துள்ளார்.

ஷிஃப்ட் முடிஞ்சு போச்சு! விமானத்தை ஓட்ட முடியாது என அடம்பிடிக்கும் விமானி...கதறும் பயணிகள்!

பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்துக்கு வரவேண்டிய விமானம் ஒன்றின் ஓட்டுன்நர் தன்னுடைய ஷிஃப்ட் முடிந்து போனதாக கூறி சவுதி அரேபியாவில் பாதி வழியில் நிறுத்தி விட்டு கிளம்பியதாக சொல்லப்படுகிறது.விமானத்தை நிறுத்தி விட்டு விமானி கிளம்பியதை தொடர்ந்து பயணிகள் அனைவரும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.பாகிஸ்தான் நாட்டின் தேசிய விமான நிறுவனமான இண்டர்நேஷனல் ஏர்லைன்ஷுக்கு சொந்தமான விமானம் ஒன்று ரியாத் நகரில் இருந்து இஸ்மலாபாத்துக்கு புறப்பட்ட போது வானிலை சரியில்லாத காரணத்திற்காக விமானி சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் எமர்ஜென்ஸி லேண்டிங் செய்து அவசரமாக தரையிறக்கியுள்ளார்.

பின்னர் வானிலை சரியில்லாத காரணத்தால் விமானம் இஸ்லாமாபாத்துக்கு புறப்படும் என நினைத்து காத்திருந்த பயணிகளுக்கு விமானி அதிர்ச்சியளித்ததாக தெரிவித்தனர்.தனது வேலை நேரம் நிறைவடைந்து விட்டதாக கூறி விமானி மேற்கொண்டு தன்னால் விமானத்தை இயக்க முடியாது என தெரிவித்து விட்டு சென்றதாக சொல்லப்படுகிறது.வானிலை மாற்றத்தால் ஏற்கனவே தரையிறக்கப்பட்டுள்ள விமானத்தை எடுக்காததால் பல மணி நேரங்களாக பயணிகள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவான நிலையில் விமானத்தை இயக்க கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.

பொறுமையை இழந்து வந்த பயணிகளிடம் விமானத்துறை அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறினர்.பின்னதாக அவர்கள் பாதுகாப்பாக தற்காலிகமான அனைவரையும் ஓட்டல் அறைக்கு மாற்றப்பட்டு தங்க வைக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.இவர்கள் அனைவரும் மாற்று விமானம் வந்த பின்னர் இஸ்லாமாபத்துக்கு அழைத்து செல்லப்பட உள்ளதாக விமான நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச விமான இயக்க விதிகளின்படி குறிப்பிட்ட மணி நேரங்களுக்கு பின்னர் விமானி கட்டாய ஓய்வு எடுக்க வேண்டும். விமானம் மற்றும் பயணிகளின் பாதுகாப்புக்கான இந்த விதி கட்டாயமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது