விமானம் நடுவானில் பறந்த போது மயங்கிய பைலட்!! - விபரீதத்தை தடுத்த பயணி!!

அமெரிக்காவின் புளோரிடா சென்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கையில் பைலட் மயங்கியதால் பயணி விமானத்தை இயக்கி பத்திரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அறங்கேறியுள்ளது. 

விமானம் நடுவானில் பறந்த போது மயங்கிய பைலட்!! - விபரீதத்தை தடுத்த பயணி!!

வட அமெரிக்காவின் அட்லாண்டிக் கடலில் அமைந்திருக்கும் தீவு நாடான பஹாமா. அவ்விடத்தில் இருந்து இரு பயணிகளோட்ய் சிறிய ரக விமானமானது அமெரிக்காவின் புளோரிடா நகரைச் நோக்கி செல்லத் தொடங்கியது. 

நடுவானில் பறந்து கொண்டிருந்த நிலையில் விமானத்தை இயக்கிய பைலட்டுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த பயணி ஒருவர் விமானி அறையில் இருந்தப்படி கட்டுப்பாடு அறையுடன் பேசி விபரங்களை தெரிவித்து உள்ளார். 

இதையடுத்து கட்டுபாடு அறையில் இருந்து பேசிய பயணிக்கு விமானத்தை இயக்கும் வழிமுறைகளை கூற அவரே அவ்விமானத்தை பாதுகாப்பாக இயக்கியுள்ளார். முன் அனுபவம் ஏதுமின்றி அந்தப் பயணியும் துணிச்சல் உடன் கட்டுபாடு அறையில் இருந்து கொடுக்கப்பட்ட அறிவுரையின் படி விமானத்தை இயக்கி பத்திரமாக தரையிறக்கினார். இது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் புளோரிடாவில் வசித்து வரும் தனது கர்ப்பினி மனைவியை காண்பதற்காக சிறிய ரக விமானத்தில் அந்தப் பயணி பயணம் மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது. 

விமானி மயங்கியதோடு அதனை பதற்றப்படாமல் கட்டுபாடு அறைக்கு தகவல் தெரிவித்து விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய பயணிக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.