தலைநகர் கீவை இருபுறங்களில் முற்றுகை... அதிரடி திருப்பமாக சமாதானத்திற்கு அழைக்கும் ரஷ்யா !!

உக்ரைன் தலைநகர் கீவ், எந்த நேரத்திலும்  கைப்பற்றப்படலாம் என்ற நிலையில், அதிரடித் திருப்பமாக சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா முன்வந்துள்ளது.

தலைநகர் கீவை இருபுறங்களில் முற்றுகை... அதிரடி திருப்பமாக சமாதானத்திற்கு அழைக்கும் ரஷ்யா !!

உக்ரைன் மீது நேற்று ரஷ்யா தொடங்கிய முப்படைத் தாக்குதலானது இன்னும் சில மணி நேரங்களில் முடிவுக்கு வந்து விடும் நிலை உள்ளது. அடுத்தடுத்த நகரங்களை கைப்பற்றி முன்னேறி வந்த ரஷ்ய ராணுவம், தற்போது தலைநகர் கீவின் தென்கிழக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை முற்றுகையிட்டு நிற்கிறது. போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள்  நகரின் மேல்  நெருக்கமாக வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன.

தொடர் வெடிச் சப்தம் கேட்டு வரும் நிலையில், அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல் நடந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்த நேரத்திலும் கீவ் வீழலாம் என்ற நிலையில், அதிரடி திருப்பம் அரங்கேறியுள்ளது. உக்ரைன் ராணுவம் ஆயுதங்களை கீழே போட்டால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரவ் தெரிவித்துள்ளார். அடக்குமுறையிலிருந்து உக்ரைனை விடுதலை செய்வதே அதிபர் புதினின் நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.