இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம்.. மக்கள் போராட்டத்தில் இணைந்த புத்த துறவிகள்!!

இலங்கையில் அரசுக்கு எதிராக மக்களுடன் இணைந்து புத்த துறவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கோத்தபய ஆட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம்.. மக்கள் போராட்டத்தில் இணைந்த புத்த துறவிகள்!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் தொடர்ந்த போராட்டம் தற்போது கோத்தபய ஆட்சி மற்றும் ராஜபக்சே குடும்பத்தின் சர்வாதிகாரத்தை அகற்றும் போராட்டமாக மாறி வலுப்பெற்றுள்ளது.

கொழும்பு காலிமுகத் திடலில் "கோட்டாகோகம" என்ற பெயரில் தொடங்கப்பட்ட போராட்டம் மழை, வெயில், துப்பாக்கிச் சூடு என எதனையும் பொருட்படுத்தாமல் நீடிக்கிறது.

அதேபோல் மக்களின் கோரிக்கையை பொருட்படுத்தாமல் ஆட்சியை விட்டு விலக மாட்டேன் என்று ராஜபக்சே குடும்பமும் பிடிவாதம் பிடிக்கிறது. இந்தநிலையில் முதலில் அரசுக்கு ஆதரவாக மக்களிடம் வாதிட்ட புத்த துறவிகளும் தற்போது கோத்தபயவுக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர்.

எதிர்க்கட்சிகளும் அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர உள்ளன.ஆனால் எதற்கும் அசைந்து கொடுக்காத ராஜபக்சே குடும்பத்தினர், நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையிலும் சர்வாதிகாரப் போக்குடன் நடந்து வருகின்றனர்.