டிரைவருக்கு ஏற்ப்பட்ட வலிப்பு...10 கி.மீ பேருந்தை ஓட்டிய பெண்!!
டிரைவருக்கு வலிப்பு ஏற்பட்டதால் பதற்றமடையாமல் துணிச்சலாக 10 கிலோ மீட்டர் பேருந்த இயக்கிய பெண்ணை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலமான புனே மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் சென்ற பேருந்தை இயக்கி வந்த ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.இதனை தொடர்ந்து பேருந்தில் பயணித்த பெண்மணி ஒருவர் சாமர்த்தியமாக யோசித்து சிறிதும் பதற்றம் கொள்ளாமல் பேருந்தை இயக்கியுள்ளார்.இந்த சம்பவமானது கடந்த வாரம் நடைபெற்ற போதில் தற்போது சமூக வலைதளப்பக்கங்களில் வேகமாக பரவி வருகிறது.
புனே அருகே உள்ள வேளாண் சுற்றுலா மையத்திற்க்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் சென்றுவிட்டு திரும்பியுள்ளனர்.அவ்வப்போது வாகனத்தை இயக்கி வந்த ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்ப்பட்டுள்ளது.அவருக்கு கை கால்கள் இழுத்து கொண்டிருந்த நிலையிலும் விபத்து நேரிடாமல் இருக்க சாலையின் விளிம்பில் வாகனத்தை நிறுத்தியுள்ளார்.இதனைக் கண்டு பேருந்தில் உள்ள அனைவரும் அழத் தொடங்கியதாக சொல்லப்படுகிறது.
இதனிடையில் அந்த பேருந்தில் பயணித்த யோகிதா சாதவ் என்ற 42 வயதான பெண் பேருந்தை தான் ஓட்டுவதாக தெரிவித்து அனைவரையும் அமைதிப்படுத்தியுள்ளார்.ஓட்டுநரை பேருந்தில் ஓரமாக அமர்த்தி விட்டு பேருந்தை மருத்துவமனை நோக்கி இயக்கியுள்ளார்.இந்த பெண் ஆனவர் ஓட்டுநரை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளையும் பத்திரமாக அவரவர் ஊர்களில் இறக்கியும் விட்டுள்ளார்.
மேலும் இது குறித்து அவர் பேசுகையில் தனக்கு கார் ஓட்ட தெரிந்ததால் பேருந்தை இயக்க முடிவு செய்தேன் எனவும் ஓட்டுநருக்கு சிகிச்சை அளிப்பது முக்கியமாக இருந்ததால் அவரை மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக அழைத்து சென்றதாகவும் அவர் யோகிதா கூறியுள்ளார்.நெருக்கடியான நேரத்தில் பதற்றமடையாமல் துணிச்சலாக சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் பேருந்தை ஓட்டிய யோகிதாவை அனைத்து தரப்பினரும் பாராட்டினர்.