ராணுவ உபகரணங்கள் கொள்முதலில் இந்திய-ரஷ்யா உறவில் சிக்கல் இல்லை.. அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்..!

அமெரிக்க மாநிலப் பொதுச்செயலாளர்

ராணுவ உபகரணங்கள் கொள்முதலில் இந்திய-ரஷ்யா உறவில் சிக்கல் இல்லை.. அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்..!

அமெரிக்காவில் சுற்றுப்பயணம்:

அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவுத் துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனை சந்தித்தார். அப்போது இரு நாடுகள் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, தகவல் பகிர்வு, தளவாட ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ரஷ்யாவுடன் எந்த பிரச்னையும் இல்லை:

இதனை தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், உக்ரைனில் நடைபெறும் போருக்கு பிறகு ரஷ்யாவிடம் இருந்த ராணுவத் தளவாடங்கள் மற்றும் உதிரி பாகங்களை கொள்முதல் செய்வதில் இந்தியா எந்தச் சிக்கலையும் எதிர்கொண்டதாக தான் நினைக்கவில்லை என்று கூறினார்.  

15 ஆண்டுகளாக நல்லுறவு:

ராணுவ உபகரணங்கள் மற்றும் தளவாடங்களை தாங்கள் எங்கிருந்து பெறுகிறோம் என்பது ஒரு பிரச்னை அல்ல என்றும், தேசிய நலனுக்காக தாங்கள் நம்புவதை தேர்வு செய்வதாகவும் விளக்கினார். கடந்த 15 ஆண்டுகளில் இந்தியா அமெரிக்காவிடமிருந்து நிறைய கொள்முதல் செய்துள்ளதாகவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டார். 

முன்னேற்றத்தை அடைந்துள்ளது:

தொடர்ந்து பேசிய ஆண்டனி பிளிங்கன், பருவநிலை மாற்றத் துறையில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருவதாகவும், இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவுகள் உண்மையான முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்றும் கூறினார்.