உக்ரைன்,ரஷ்யா நடுவே போர் தொடங்கி இன்றோடு 3 மாதங்கள் நிறைவு : எதிர்காலம் குறித்த கேள்வியில் பொதுமக்கள்..

போர் தொடங்கி முழுதாக 3 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், எதிர்காலம் குறித்த கேள்விகளுடன் உக்ரைன் மக்கள் வெளிநாடுகளில் அகதிகளாக அடைந்து கிடக்கும் அவல நிலை நீடிக்கிறது.

உக்ரைன்,ரஷ்யா நடுவே போர் தொடங்கி இன்றோடு 3 மாதங்கள் நிறைவு : எதிர்காலம் குறித்த கேள்வியில் பொதுமக்கள்..

கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடங்கிய போது ஓரிரு நாட்கள் அல்லது ஓரிரு வாரங்களில் போர் முடிவுக்கு வந்து விடும் என்று உலகம் எதிர்பார்த்தது. உக்ரைன் மக்களும் இப்போதைக்கு உயிரை மட்டும் காப்பாற்றிக் கொள்வோம் என அண்டை நாடுகளுக்கு அகதிகளாக படையெடுத்தனர். 

ஆனால் 3 மாதங்களாகியும் போர் நிற்காததுடன் தங்கள் வாழ்விடங்கள் முழுமையாக அழிக்கப்படும் காட்சிகளை பார்த்து கண்ணீர் விட்டு கதறுகின்றனர். மேலும் தஞ்சம் கொடுத்த நாடுகளிலும் பிரச்சினைகள் எழத் தொடங்கியுள்ளன. பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளாக இருக்கும் அகதிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட நீண்ட கால உதவிகள் வழங்குவதில் பெரும் சிக்கல் இருப்பதாக போலந்து உள்ளிட்ட நாடுகள் புலம்புகின்றன.  

சொந்த நாடு திரும்ப முடியாத நிலையில் தஞ்சமடைந்த நாடுகளிலும் தவித்து வருகின்றனர் உக்ரைன் மக்கள். 18 முதல் 60 வயதுக்குட்பட்ட ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற உக்ரைன் அரசு தடை விதித்த நிலையில் குடும்ப ஆண் உறுப்பினர்களின் நிலை தெரியாமல் நாளும் கண்ணீர் வடித்து வருகின்றனர்.  மேற்குலகின் பேச்சை நம்பி ரஷ்யாவுடனான போரை அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து வரும் நிலையில் எதிர்காலம் தெரியாத இருளில் உறைந்து கிடக்கின்றனர் உக்ரைன் மக்கள்..