நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் யோகா

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ஒரே நேரத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று யோகா செய்து அசத்தினர்.

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் யோகா

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ஒரே நேரத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று யோகா செய்து அசத்தினர்.

யோகாவை சர்வதேச தினமாக அறிவிக்க வேண்டும் என பிரதமர் மோடி ஐ.நா. பொதுசபையில் 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி வலியுறுத்துனார். அதைத் தொடர்ந்து உலக நாடுகளின் ஒருமித்த ஆதரவுடன், ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய துணைத் தூதரகம் சார்பில், அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.'சங்கராந்தி' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 3 ஆயிரத்திற்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர் ஒரே நேரத்தில் யோகா செய்து அசத்தினர்.