உருமாறும் ஒமிக்ரான்.. மீண்டும் ஒரு கொரோனா அலை.. எச்சரிக்கை விடுத்துள்ள உலக சுகாதார அமைப்பு..!

ஒமிக்ரானால் தடுப்பூசி செலுத்தாத முதியவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர் - சவுமியா சுவாமிநாதன்..!

உருமாறும் ஒமிக்ரான்.. மீண்டும் ஒரு கொரோனா அலை.. எச்சரிக்கை விடுத்துள்ள உலக சுகாதார அமைப்பு..!

வீட்டிற்குள் முடக்கம்:

உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத வருடம் என்னவென்று கேட்டால் உலக மக்கள் பெரும்பான்மையானோர் 2020 என சொல்லக் கூடும். 2019-ம் ஆண்டு இறுதியில் எங்கிருந்தோ வந்த ஒரு தொற்று கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கும் மேலாக நம்மை வீட்டிற்குள் முடங்க வைத்தது. 

கொத்து கொத்தாக உயிர் பலி:

மக்கள் வெளியே நடமாட முடியாமல், முகத்தை காட்ட முடியாமல், மருத்துவமனையில் இடம் பத்தாமல், படுக்கைகள் இன்றி மூச்சு விட முடியாமல், ஆம்புலன்ஸில் நீண்ட வரிசையில் காத்திருந்து கொத்து கொத்தாக உயிரை வாங்கிய ஒரு வைரஸ் கொரோனா. 

தடுப்பூசி:

முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என தனது வீரியத்தை குறைக்க, உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கியது இந்த வைரஸ். இரண்டு வருட பிறந்தநாள் கொண்டாடிய பிறகும் கூட, இன்றும் ஒரு துண்டு செய்தியாக உலகில் இன்று புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை என இடம் பிடித்து விடுகிறது கொரோனா. ஒமிக்ரான், டெல்டா என பல பெயர்களில் உருமாறி இன்று தடுப்பூசி செலுத்திக் கொண்டால் உயிர் பிழைக்கலாம் என்ற இடத்தில் நிற்கிறது. 

எச்சரிக்கை:

சமீப காலமாக உயிரிழப்புகள் எதுவும் பெரிதாக ஏற்படுவதில்லை என்பதால், மக்கள் தங்களது இயல்பு நிலைக்கு வந்திருக்கும் இந்த நேரத்தில், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி வெளியிட்டுள்ள செய்தி மீண்டும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

மீண்டும் ஒரு கொரோனா அலை:

மரபணு மாறிய ஒமிக்ரான் வைரசால் மேலும் ஒரு கொரோனா அலை வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன். புனேவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒமிக்ரானின் அதிவேக பரவல் குறித்து பேசினார். 

XBB வகை கொரோனா:

ஒமிக்ரானால் தடுப்பூசி செலுத்தாத முதியவர்கள் பலர் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ள அவர், தற்போது ஒமிக்ரானின் மரபணு மாறிய XBB வகை கொரோனா பரவி வருவதாக கூறியுள்ளார். குறிப்பிட்ட சில நாடுகளில் மேலும் ஒரு அலை வீச வாய்ப்புள்ளதாகவும், இதன் வீரியம் பற்றி இன்னும் முழுமையாக தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.