FBI சோதனையால் நிலைகுலைந்து போன டிரம்ப்.. நாட்டின் இருண்ட காலத்தை குறிப்பதாக ஆவேசம்..!

அதிபரின் அதிகாரப்பூர்வ ரெக்கார்டுகளை தனது ஃபுளோரிடா ரெசார்ட்டுக்கு

FBI சோதனையால் நிலைகுலைந்து போன டிரம்ப்.. நாட்டின் இருண்ட காலத்தை குறிப்பதாக ஆவேசம்..!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் வீட்டில் FBI அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

2024-ல் மீண்டும் போட்டி: அமெரிக்காவின் குடியரசுக் கட்சியை சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டிரம்ப் தற்போது அதிபராகவுள்ள ஜோபைடனின் ஆட்சியில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு தனது விமர்சனத்தை முன்வைத்து வருகிறார். 2016-ல் இருந்து 2020-ம் ஆண்டு வரை அதிபராக இருந்த டிரம்ப் மீண்டும் 2024-ம் ஆண்டு களமிறங்குவேன் என அறிவித்திருந்தார். 

FBI அதிரடி சோதனை: இந்த நிலையில் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள டிரம்ப் வீட்டில் FBI அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிபரின் அதிகாரப்பூர்வ ரெக்கார்டுகளை தனது ஃபுளோரிடா ரெசார்ட்டுக்கு டிரம்ப் மாற்றியதாக வெளியான தகவலின் படி இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. 

டிரம்ப் அறிக்கை: இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தனது வீட்டில் FBI அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகவும், ஆனால் இது தொடர்பாக இப்போது எதுவும் கூற முடியாது எனவும் கூறியுள்ளார். தனது எஸ்டேட்டை FBI அதிகாரிகள் முற்றுக்கையிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள டிரம்ப், சோதனை என்ற பெயரில் எனது எஸ்டேட் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நாட்டின் இருண்ட காலத்தையே குறிப்பிடுவதாகவும்" டிரம்ப் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.