ஐ.நா. பொதுச்செயலாளர் உக்ரைன் சென்ற நிலையில்... ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பெண் பத்திரிகையாளர் பலி!

ஐ.நா. பொதுச்செயலாளர் உக்ரைன் சென்ற நிலையில்  ரஷியா படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தின. இதில்  பெண் பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 

ஐ.நா. பொதுச்செயலாளர் உக்ரைன் சென்ற நிலையில்... ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பெண் பத்திரிகையாளர் பலி!

தலைநகர் கீவை கைப்பற்ற முடியாதநிலையில், கிழக்கு உக்ரைன் மீது ரஷிய படைகள் கவனம் செலுத்தி வந்தன. இந்நிலையில், உக்ரைனுக்கு சென்றுள்ள  ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ்  அங்கு தாக்குதலில் சேதமடைந்த இடங்களை பார்வையிட்டார் .

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய ஒரு மணி நேரத்தில் தலைநகர் கீவ் மீது ரஷியப்படைகள் சற்றும் எதிர்பாராத விதமாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் அமெரிக்க நிதி உதவியுடன் செயல்படுகிற வானொலியில் பணியாற்றி வந்த பெண் பத்திரிகையாளர் விரா ஹைரிச் கொல்லப்பட்டார். அவர் வீட்டில் இருந்தபோதுதான் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். 

இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 10 பேர் படுகாயம் அடைந்தனர். பலியான பெண் பத்திரிகையாளர் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.