முதியவர்களுக்கு பைசரின் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அனுமதி!

பைசரின் பூஸ்டர் தடுப்பூசியை முதியவர்களுக்கு செலுத்த அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது.

முதியவர்களுக்கு பைசரின் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அனுமதி!

பைசரின் பூஸ்டர் தடுப்பூசியை முதியவர்களுக்கு செலுத்த அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது.

கொரோனா 2வது அலைக்கு பின் உலக முழுவதும் தடுப்பூசி செலுத்தும் நடைமுறை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதிக தொற்று பாதிப்புக்குள்ளான அமெரிக்காவில் பெரும்பாலோனோருக்கு இரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் விதமாக 3வது டோஸாக பூஸ்டர் டோஸை செலுத்த திட்டமிட்டு வருகிறது.  

இந்தநிலையில் இரு டோஸ் பைசர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், நோய் எதிர்ப்பு திறன் குன்றியவர்களுக்கு 2வது டோஸ் செலுத்திய 6 மாதத்திற்கு பின் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த அந்நாட்டு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.