பாகிஸ்தான் பிரதமரின் ரஷ்ய பயணம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்து!!

உக்ரைன் விவகாரத்தில், ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு ஆட்சேபனை தெரிவிப்பது ஒவ்வொரு பொறுப்புள்ள நாட்டின் கடமை என, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமரின் ரஷ்ய பயணம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்து!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், 2 நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். கடந்த 23 ஆண்டுகளில், பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் அரசு முறை பயணமாக ரஷ்யா செல்வது இதுவே முதல் முறையாகும். உக்ரைன் - ரஷ்யா இடையேயான பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள இந்த தருணத்தில், பாகிஸ்தான் பிரதமர் ரஷ்யா சென்றுள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

உக்ரைனின் 2 மாகாணங்களை தனி நாடுகளாக அங்கீகரித்துள்ள ரஷ்யாவின் நடவடிக்கைக்கு, ஐ. நா. உள்பட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமரின் ரஷ்ய பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சகம், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு ஆட்சேபனை தெரிவிப்பது ஒவ்வொரு பொறுப்புள்ள நாட்டின் கடமை என தெரிவித்துள்ளது.