தொடர்ந்து சரணடையும் இரும்பாலையில் இருந்த உக்ரைன் வீரர்கள் - இதுவரை 771 பேர் என ரஷ்யா தகவல்!!

மரியுபோல் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 771 உக்ரைன் வீரர்கள் சரணடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. 

தொடர்ந்து சரணடையும் இரும்பாலையில் இருந்த உக்ரைன் வீரர்கள் - இதுவரை 771 பேர் என ரஷ்யா தகவல்!!

மரியுபோல் நகரை முழுமையாக கைப்பற்றும் முயற்சியில் இருந்த ரஷ்யாவுக்கு அந்நகரில் பத்து  கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடந்த அஸோவ்ஸ்டல் இரும்பாலை மிகப் பெரிய சவாலாக இருந்தது.

பாதாள அறைகளில் பதுங்கியிருந்து உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து பதில் தாக்குதல் நடத்தி வந்தனர். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ரஷ்யா குண்டுகளை மழைபோல் பொழிய விட்டு ஆலையை தகர்க்கத் தொடங்கியது. 

இதனைப் பார்த்த உக்ரைன் வீரர்களின் குடும்பத்தினர் கதறத் தொடங்கினர். ஆயுதங்களை கீழே போட்டு வீரர்கள் சரணடைந்தால் தாக்குதல் நிறுத்தப்படும் என்று ரஷ்யா அறிவித்தது. அதனை ஏற்று வீரர்கள் சரணடைந்து வருகின்றனர்.

நேற்று 959 பேர் சரணடைந்த நிலையில் இன்று 771 என மொத்தம் ஆயிரத்து 730 பேர் சரணடைந்துள்ளனர். அவர்களில் 80 பேர் படுகாயமடைந்துள்ளனர். அனைவரும் பேருந்துகளில் ஏற்றபட்டு ரஷ்ய கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர். சரணடைவு நிகழ்வுகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் பதிவு செய்து வருகின்றனர்.