ரஷ்ய அதிபரை போல் அல்ல... குற்றவாளிகளை மட்டுமே கொலை செய்கிறேன் - பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ பேச்சு..!

ரஷ்ய அதிபர் புதினை போல் அல்லாமல், குற்றவாளிகளை மட்டுமே தான் கொலை செய்வதாக பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூடெர்ட் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ரஷ்ய அதிபரை போல் அல்ல... குற்றவாளிகளை மட்டுமே கொலை செய்கிறேன் - பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ பேச்சு..!

புதினின் நெருங்கிய நண்பராக கூறப்படும் இவர், முதன்முறையாக அவருக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டத்தின் தொலைக்காட்சி ஒளிப்பரப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த 3 மாத போரால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் பலர் ரஷ்யா அதிபரும், தானும் பலரை கொன்று குவிப்பதாக கூறி வரும் நிலையில்,   அப்பாவி மக்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதாகவும், ஆனால் தனது அரசு குழந்தைகள், முதியவர்களை விடுத்து குற்றவாளிகளை மட்டுமே கொலை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.