ஜனவரி முதல் வெனிஸில் சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க திட்டம்..!

பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருவது அந்த நகருக்கு பெரும் ஆபத்தாக மாறி வருவதாக தகவல்..!

ஜனவரி முதல் வெனிஸில் சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க திட்டம்..!

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வெனிஸ் நகருக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம் வசூலிக்க வெனிஸ் நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது.  இத்தாலியின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள வெனிஸ் நகரம், நூற்றுக்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கியது.  வெனிஸ் நகரம் உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், ஆண்டு தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வெனிசூலா வந்து செல்கின்றனர். இந்த சூழலில் சமீபத்திய ஆண்டுகளில் வெனிஸ் நகரில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருவது அந்த நகருக்கு பெரும் ஆபத்தாக மாறி வருகிறது. இந்த நிலையில் அதிகப்படியான சுற்றுலா பயணிகளை சமாளிக்கும் முயற்சியாக அடுத்த ஆண்டு  ஜனவரி முதல் வெனிஸ் நகருக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம் வசூலிக்க வெனிஸ் நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது.