சிதறிய பெட்ரோல் பங்க்: பதற வைக்கும் வீடியோ காட்சிகள்  

ரஷ்யாவில் பெட்ரோல் பங்க் ஒன்று வெடித்துச் சிதறும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

சிதறிய பெட்ரோல் பங்க்: பதற வைக்கும் வீடியோ காட்சிகள்   

ரஷ்யாவில் பெட்ரோல் பங்க் ஒன்று வெடித்துச் சிதறும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

ரஷ்யாவின் Novosibirsk என்ற நகரில் பெட்ரோல் நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பெட்ரோல் பங்கில் நேற்று வழக்கம்போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொது யாரும் எதிர்பாராத விதமாக திடீரென்று இந்த பங்க் வெடித்துச் சிதறியது. இந்த விபத்து காரணமாக சுமார் 10 ஆயிரம் சதுரடி பரப்பளவில் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதி முழுவதையும் புகை மண்டலம் சூழ்ந்தது.

இந்த விபத்தில், 33 பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முறையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாததே விபத்துக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்ரோல் பங்க் வெடித்துச் சிதறும் காட்சிகளை அவ்வழியாக சென்றவர்கள் படம் பிடித்து வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகின்றன.