பிரைம் மினிஸ்டர் ரொம்ப நாட்டி..5 வயதான சிறுமி கேள்வி கேட்டு வீடியோ வெளியீடு!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ரொம்ப நாட்டி அனைவரையும் வீட்டில் இருக்க சொல்லிவிட்டு இவர் மட்டும் பார்ட்டிக்கு போவாரம் என இந்திய வம்சாவளியான 5 வயது சிறுமி வீடியொ ஒன்றை பதிவிட்டது தற்போது வைரலாகி வருகிறது.

பிரைம் மினிஸ்டர் ரொம்ப நாட்டி..5 வயதான சிறுமி கேள்வி கேட்டு வீடியோ வெளியீடு!

ஊரடங்கின் போது அனைவரையும் வீட்டில் இருக்க சொன்ன பிரைம் மினிஸ்டர் தனியாக பார்ட்டிக்கு சென்றுள்ளதாக இதற்காக அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என 5 வயது சிறுமி பேசியுள்ளார்.இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் நிலையில் இங்கிலாந்து பிரதமரை பற்றி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த சிறுமி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.5 வயது ஆகும் இவரது பெயர் லாய்லா.இந்த சிறுமியானவர் தனது குடும்பத்தோடு இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.இங்கிலாந்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அந்நாட்டு அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.இந்த நிலையில் ஊரடங்கு குறித்தும் அதனை மீறும் வகையில் பிரதமர் நடந்து கொள்வதாக சிறுமி தனது தாத்தாவிடம் புகார் அளிப்பது போல பேசியுள்ளார்.

போரிஸ் ஜான்சன் அனைவரையும் ஊரடங்கில் வீட்டில் இருக்க சொல்லிவிட்டு இவர் மட்டும் பார்ட்டிக்கு சென்றுள்ளார் இதனால் அவர் அனைவரிடமும் மன்னிப்பு கோர வேண்டும் என அச்சிறுமி கேட்டுக்கொண்டுள்ளார்.இதற்கு மேல் அவருக்கு பிரதமர் பதவி வகுக்க கூடாது மேலும் பிரதமர் இல்லத்திற்கு செல்ல கூடாது எனவும் வேறு யாரவது நல்ல ஒரு பிரதமர் வேண்டும் எனவும் அவர் பேட் பிரைம் மினிஸ்டர் என்றவாறு விடீயோ பதிவில் பேசியுள்ளார்.சிறுமி பிரதமர் குறித்து பேசிய காட்சிகள் சமூக வலைதளபக்கங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

இது குறித்து பலர் கருத்து தெரிவிக்கையில் சிறுமிக்கு எந்த அளவு ஞானம் இருக்கிறது நாட்டு நடப்புகளை உன்னிப்பாக கவனித்து வருகிறார் என பாரட்டி வருகின்றனர்.இது குறித்து சிறுமியின் தாயார் கூறுகையில் தனது மகளுக்கு அரசியலில் ஆர்வம் அதிகம் ஒரு நாள் நான் பிரதமராக ஆகுவேன் என அடிக்கடி கூறி வருவதாக தெரிவித்துள்ளார். வருங்காலத்தில் தனது மகள் பெரிய அளவிலான அரசியல்  வாதியாக வருவார் என கருதுவதாக கூறியுள்ளனர்.

மேலும் இவர் நாட்டு நடப்புகள் பற்றிய செய்திகள் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் ஆர்வத்துடன் அரசியல் சார்ந்தவைகளை படித்து வருவதாகவும் அவரது தாயார் கூறியுள்ளார்.