இஸ்ரேல் -துருக்கி உறவு மீண்டும் நெருக்கம் பெறக் காரணம் என்ன?

இஸ்ரேலுடனான நட்புறவு மீண்டும் வலுவடையும் என்று துருக்கி பிரதமர் தயிப் எர்டோகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் -துருக்கி உறவு மீண்டும் நெருக்கம் பெறக் காரணம் என்ன?

இஸ்ரேலுடனான நட்புறவு மீண்டும் வலுவடையும் என்று துருக்கி பிரதமர் தயிப் எர்டோகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வரும் பிப்ரவரி மத்தியில் இஸ்ரேல் அதிபர் இசாக் ஹெர்சாக் துருக்கி வர உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே குழாய் வழியாக இயற்கை எரிவாயு  கொண்டு செல்லும் திட்டம் குறித்து பேசப்படும் என்றும் குறிப்பிட்டார்.

 கடந்த 2010-ம் ஆண்டு ஹமாஸ் போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதிக்கு உதவிப் பொருட்கள் ஏற்றிச் சென்ற துருக்கி சமூக ஆர்வலர்கள் கப்பல் மீது இஸ்ரேல் கடற்படை தாக்குதல் நடத்தியது. அதில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து துருக்கி-இஸ்ரேல் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.