கணவர் மீது தீராக் காதல் - கணவரின் அஸ்தியை சாப்பிடும் மனைவி

உயிரிழந்த தனது கணவரின் அஸ்தியை சாப்பிடும் மனைவியின் வினோத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கணவர் மீது தீராக் காதல் - கணவரின் அஸ்தியை சாப்பிடும் மனைவி

உயிரிழந்த தனது கணவரின் அஸ்தியை சாப்பிடும் மனைவியின் வினோத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்த 26 வயது பெண்மணி கேசி. இவர் 2009 ஆம் ஆண்டு சீயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் விதியின் விளையாட்டால் கணவர் சீயன் சோகமான ஆஸ்துமா பாதிப்பால் உயிரிழந்தார்.

இதனால் மன வேதனைக்கு உள்ளான கேசி தான் செல்லும் இடமெல்லாம் கணவரின் அஸ்தியை எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளார்.

இதில் ஆச்சரியபடுவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும் கணவரின் அஸ்தியை விரலால் தொட்டு சாப்பிட்டு வருகிறார். கணவரின் அஸ்தியை சாப்பிடும் பழக்கத்தை தன்னால் நிறுத்த முடியாது எனவும் கூறுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.