கடும் வெப்பத்தால் ஏற்பட்ட காட்டுத்தீ.... பலியானோர் எண்ணிக்கை உயர்வு!!

கடும் வெப்பத்தால் ஏற்பட்ட காட்டுத்தீ.... பலியானோர் எண்ணிக்கை உயர்வு!!

சிலியில் பரவி வரும் காட்டுத்தீயில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. 

சிலி நாட்டில் கடும் வெப்பம் நிலவி வருகிறது.  இதன் காரணமாக  நாடு முழுவதும் வெப்பக்காற்று காரணமாக 150க்கும் இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  இந்நிலையில், சிலியில் காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், 500க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 16 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என கூறப்படுகிறது. 

இதையும் படிக்க:   அமெரிக்காவில் உருவான இந்தியாவின் நிசார்...விரைவில் இந்தியா வருகை!!!