எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குவாரா? தற்போதைய நிலைமை என்ன?

எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குவாரா? தற்போதைய நிலைமை என்ன?

ட்விட்டர்

ட்விட்டர் என்ற சமூக வலைத்தளம் ஜாக் டார்சேய், நோவா கிளாஸ், பிஸ் ஸ்டோன், இவான் வில்லியம்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்டு கடந்த 2006ஆம் ஆண்டு மார்ச் 21ல் தொடங்கப்பட்டது. ட்விட்டர்  நிறுவனம் சான் பிரான்சிஸ்கோ அமைந்துள்ளது. உலகம் முழுவதும் 25க்கும் மேற்பட்ட அலுவலகங்களைக் கொண்டுள்ளது.

ட்விட்டரின் பயன்பாடுகள்

ட்விட்டர் என்பது ஒரு சமூக ஊடக வலையமைப்புச் சேவையாகும். இது ட்வீட்ஸ் எனப்படும் 140 எழுத்துகள் கொண்ட குறுந்தகவல்களை அனுப்பவும், படிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இதில் நமக்கு தேவையான அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் அளவிற்கு இச்செயலி செயல்பட்டு வருகிறது.  

ட்விட்டர் பயனாளிகளின் தகவல்கள்:

ஆரம்ப காலங்களில் பெரிதும் பயன்படுத்தப்படாத ட்விட்டர், 2012ஆம் ஆண்டிலிருந்து, 10 கோடிக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தி வந்தனர். 2013ஆம் ஆண்டில், அதிக பார்வையாளர்கள் பார்வையிடப்பட்ட இணையதளங்களில் ஒன்றாக ட்விட்டர் இருந்தது. 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ட்விட்டர் 33 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டிருந்தது.

ட்விட்டரை விலைக்கு வாங்க முன் வந்த எலான் மஸ்க்

ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லாவின் தலைமை செயல் அலுவலர் எலான் மஸ்க் ட்விட்டரை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்குவதற்கு ட்விட்டர் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு ஏப்ரல் 25, 2022 அன்று ஒப்புக்கொண்டது.

ஜூலை 8, 2022 அன்று, சமூக ஊடக நிறுவனம் தளத்தில் போலி கணக்குகள் பற்றிய தகவலை வழங்கத் தவறிவிட்டதாகக் கூறி, ஒப்பந்தத்தை நிறுத்துவதாக மஸ்க் கூறினார். ட்விட்டர் நிறுவனத்தின் பிரட் டெய்லர், மஸ்க்கிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார், ஜூலை 12 அன்று டெலாவேர் சான்செரி நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார்.

ட்விட்டரை எலான் மஸ்க் வாங்குவாரா?

தற்போது ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவாரா? மாட்டாரா? என்ற கேள்வி பெரிதாக பேசப்பட்டு வருகிறது. கெத்தாக வந்து நான் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிறேன் என சொன்னதும் அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என்னது ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்க போகிறாரா? அதில் வேறு ஏதும் புதிய அம்சங்கள் வருமோ என அனைவரும் ஆர்வமுடன் காத்திருந்த நிலையில், ட்விட்டர் நிறுவனம் மஸ்க் கேட்ட தகவல்களை கொடுக்க மறுத்ததால் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க மறுத்ததாக தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ட்விட்டர் வாரியத் தலைவர் எலான் மஸ்க் மீது வழக்கு தொடர்ந்தார்.

ட்விட்டரை வாங்குவதாக கூறிவிட்டு பிறகு பின் வாங்குவது என்ன நியாயம்..? கண்டிப்பாக எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியாக வேண்டும் என கூறியுள்ளார் ட்விட்டர் நிறுவனத்தின் பிரட் டெய்லர். இது குறித்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது.

எலான் மஸ்க் கேட்ட தகவல்களை ட்விட்டர் நிறுவனம் தர மறுத்தது ஏன்..? இதில் வேறு எதுவும் உள்நோக்கம் இருக்கிறதா? என பல சந்தேககங்கள் எழுந்து வருகிறது. ட்விட்டர் நிறுவனம், எலான் மஸ்கிடம் இருந்து எதை மறைக்க பார்க்கிறது.. ஏன் அவர் கேட்ட தகவல்களை தர மறுக்கிறது என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்து வருகிறது. பொறுத்து இருந்து பார்ப்போம் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவாரா? மாட்டாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.