மெக்காவில் பாதுகாப்புப்பணியில் முதன்முறையாக பெண்கள்...

இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவில், முதல்முறையாக பெண்கள் பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மெக்காவில் பாதுகாப்புப்பணியில் முதன்முறையாக பெண்கள்...
சவுதியில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், அண்மைக்காலமாக அவர்களின் நலன் சார்ந்த சீர்த்திருத்தங்களை இளவரசர் முகமது பின் சல்மான் அறிவித்துள்ளார். குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கில் அவர், பொருளாதார மற்றும் சமூக சீர்த்திருந்தங்களை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.
 
அந்தவகையில் பெண்கள் தனியே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் ராணுவத்திலும் சேர அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இஸ்லாமியர்களின் புனித தலமாக கருதப்படும் மெக்கா-மெதினாவில் 12க்கும் அதிகமான ராணுவ வீராங்கனைகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காக்கி உடையில் மிளிரும் அவர்கள்,  கருப்பு நிற துணியால் தலையில் முக்காடிட்டு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.