உலகப்போரா..? உக்ரைனுக்கு ஆதரவாக குதித்த 25 நாடுகள்.. மிரட்டி வரும் ரஷ்யா!!

உக்ரைனுக்கு ஆதரவாக 25 நாடுகள் ரஷ்யாவை எதிர்த்து களத்தில் குதித்துள்ளது.

உலகப்போரா..? உக்ரைனுக்கு ஆதரவாக குதித்த 25 நாடுகள்.. மிரட்டி வரும் ரஷ்யா!!

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. உக்ரைன் மீது அணைத்து இடங்களில் இருந்து தாக்க போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை. அதனால் தாக்க போவதாக ரஷ்யா கூறியுள்ளது.. இதற்கு உக்ரைனும் பதிலடி தாக்குதல் நடத்தி வருவதால் போர் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக எந்த நாடுகளும் நேரடியாக உதவவில்லை.. ராணுவ உபகரணங்கள், பொருளாதார ரீதியான உதவிகளை மட்டுமே உலக நாடுகள் வழங்கி வருகிறது.. 

இது குறித்து உக்ரைன் அதிபர் கூறியது, எந்த நாடுகளும் எங்கள் மேல் அனுதாபம் காட்டவேண்டும்.. எங்களுக்கு உண்மையான உதவி தேவை.. உலக நாடுகள் எங்களுக்கு ராணுவ ரீதியான உதவிகளை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். தொடக்கத்தில் உக்ரைனுக்கு உதவ உலக நாடுகள் தயக்கம் காட்டி வந்தது.

இந்நிலையில், தற்போது உக்ரைனுக்கு உதவ உலக நாடுகள் முன் வந்துள்ளது..  அமெரிக்கா, நெதர்லாந்து, சுவீடன், பின்லாந்து, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவில் உள்ள பிற நாடுகள் உட்பட மொத்தம் 25 நாடுகள் உக்ரைனுக்கு உதவ முன் வந்துள்ளன. 

இதற்கு முன் உக்ரைனுக்கு ஆதரவளிக்காத சில நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவளிப்பது இதுவே முதல் முறை. உக்ரைனுக்கு குண்டுகள், பீரங்கிகள், ராணுவ உபகரணங்கள், பொருளாதார ரீதியாகவும் இந்த நாடுகள் உதவி வருகிறது.

உக்ரைனுக்கு உதவ அமெரிக்காவும் முன்வந்துள்ளது. உக்ரைனுக்கு உதவ 350 மில்லியன் டாலர் ராணுவ உபகாரணங்கள், பணம், ஆயுதங்களை வழங்க பைடன் ஒப்புதல் வழங்கி உள்ளார். உக்ரைன் நேட்டோ நாடு கிடையாது.. அதனால், உக்ரைனுக்கு பொருளாதார உதவிகளை மட்டுமே அமெரிக்கா வழங்கி உள்ளது.

இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படும் நாடுகளை ரஷ்யா மிரட்டி வருகிறது.. நீங்கள் நேட்டோ படையில் இணைய கூடாது. இணைந்தால் நீங்கள் கடுமையான விளைவுகளையு சந்திக்க நேரிடும் என உலக நாடுகளை ரஷ்யா கூறி வருகிறது. ரஷ்யாவின் இந்த செய்யாலால் உலக அளவில் போர் வெடிக்குமோ என அச்சம் எழுந்துள்ளது.