ஏமன் சிறை மீது விமானத் தாக்குதல் - குறைந்தது 70 பேர் பலியான கொடூர நிகழ்வு!

ஏமன் நாட்டில் உள்ள தடுத்துவைப்பு மையம் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல். இதனை ஐ.நா கண்டித்து வருகிறது.

ஏமன் சிறை மீது விமானத் தாக்குதல் - குறைந்தது 70 பேர் பலியான கொடூர நிகழ்வு!

இந்த தடுத்துவைப்பு மையமானது (சிறைக்கூடம்) சௌதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சாதா என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன் மீது கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்பட்ட விமானத் தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொள்ள ஐ.நா தலைமை செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் உத்தரவிட்டதாக சொல்லப்படுகிறது.

ஏமனில் செயல்படும் ஹுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சௌதி தலைமையில் கூட்டணி நாடுகள் 2015 ஆம் ஆண்டு முதல் போராடி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது நடத்தப்பட்ட தாக்குதலில் 10 ஆயிரம் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் பல்லாயிரம் என இந்த போரின் மூலம் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்த பாதிப்பு உருவானதிற்கு அவர்களின் அடாவடியான சண்டையை மட்டுமே மூலப் பொருளாக கொண்டுள்ளது.

நேற்று நடத்தப்பட்ட விமான தாக்குதல் நிகழ்த்திய பின்பு பல மணி நேரங்கள் கடந்தும் இடிபாடுகளில் இருந்த சடலங்களை எடுத்த வண்ணம் இருந்துள்ளனர். மேலும் இடிபாடுகளில் யாரேனும் உயிரோடு மீள்வார்களா என்பது வேதனை அளிப்பதாக மீட்பு துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த தாக்குதலில் துல்லியமாக இதுவரை 70 பேர் கொல்லப்பட்டதாகவும் இந்த எண்ணிக்கையானது படிப்படியாக உயர்ந்து வருவதை கண்டு அஞ்சி வருவதாக மெடசின்ஸ் சேன்ஸ் ஃப்ரான்டியர்ஸ் (எல்லைகள் கடந்த மருத்துவர்கள்) என்ற சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை மருத்துவமனைக்கு 200 காயமடைந்தோர் வந்ததாக மருத்துவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத் தாக்குதல் நடந்த இடத்தில் இன்னும் பல சடலங்கள் உள்ளன. எவ்வளவு பேர் இறந்தார்கள் என்று அறிவது சாத்தியமாக இல்லை. இது கொடூரமான வன்செயலாகத் தெரிகிறது"எம்.எஸ்.எஃப். அமைப்பின் ஏமன் நாட்டுத் தலைவர் அகமது மகட் கூறியுள்ளார். மேலும், தென் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஹுடைடா நகரில் தொலைத் தொடர்பு அமைப்பு ஒன்று தாக்கப்பட்டபோது அருகில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த 3 சிறுவர்கள் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில், கிட்டத்தட்ட நாடு முழுவதும் இணையத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. தொலைத் தொடர்பு அமைப்பு தாக்கப்பட்டதுதான் இதற்குக் காரணம் என்கிறது ஹூதி அமைப்பு.

ஹூடைடாவில் தங்கள் கூட்டணி தாக்குதல் நடத்தியதாகக் கூறிய சௌதி அரேபியா, சாதாவில் நடந்த தாக்குதல் குறித்து எதுவும் கூறவில்லை. ஐக்கிய அரபு எமிரேட் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் திங்கள்கிழமை ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்திய பிறகு சௌதி கூட்டணி ஏமனில் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இது போன்ற மோசமான தாக்குதல் அந்நாட்டின் மீது நடத்தப்படுவது இதுவே முதல் முறை.

அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் இது குறித்து பதற்றம் தணிய வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகிறார்.