யோகா தோன்றியது இந்தியாவில் அல்ல, நேபாளத்தில்...... சொல்வது கே.பி. சர்மா ஒலி

யோகா இந்தியாவில் தோன்றியது அல்ல, நேபாளத்தில் தான் உருவானது என கே.பி. சர்மா ஒலி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

யோகா தோன்றியது இந்தியாவில் அல்ல, நேபாளத்தில்...... சொல்வது கே.பி. சர்மா ஒலி

யோகா இந்தியாவில் தோன்றியது அல்ல, நேபாளத்தில் தான் உருவானது என கே.பி. சர்மா ஒலி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அகில உலகத்துக்கு இந்தியா வழங்கிய பெருங்கொடைகளில் முக்கியமானது, யோகா. மனித குலத்தின் நலம் பேணும் அற்புதமான இந்த கலைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி, சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி 7-வது யோகா தினம் நேற்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி மக்கள் வீடுகளில் தனியாகவும், பொது இடங்களில் குழுவாகவும் பல்வேறு ஆசனங்கள் மற்றும் பிரணாயாம மூச்சுப்பயிற்சிகளில் ஈடுபட்டனர். மலை உச்சிகள் முதல் கடற்கரை வரை, நகர சதுக்கங்கள் முதல் பூங்காக்கள் வரை என உலகம் முழுவதும் நேற்று சிறப்பான யோகா கொண்டாட்டங்கள் நடைபெற்றது.இந்நிலையில், காத்மாண்டுவில் நேற்று நடைபெற்ற  சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கே.பி.  சர்மா ஒலி  பேசினார் அப்போது, யோகா இந்தியாவில் தோன்றியது அல்ல. யோகா கண்டுபிடிக்கப்பட்டபோது, இந்தியா ஒரு நாடாகவே இல்லை என்றும்  பல ராஜ்ஜியங்களாக இருந்தது என்றும் கூறினார். நேபாளத்தில் தான் யோகா தோன்றியது. அதை சர்வதேச அரங்கில் முன்னிறுத்த நாம் தவறிவிட்டோம் என்றும் ஆனால் இந்தியப் பிரதமர், நரேந்திர மோடி அதற்கு உரிமை கோரி, சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்று விட்டார் என்றும் கூறினார்.  நம் நாட்டைச் சேர்ந்த முனிவர்கள், யோகிகள் குறித்தும் உலகுக்கு தெரிவிக்க 
தவறிவிட்டோம் என கூறிய சர்மா ஒலி, நேபாளத்தில் உள்ள அயோத்தியாபுரியில் தான், ராமர் பிறந்தார் என்றும் சீதாவும் நேபாளத்தின் தேவ்கட் பகுதியில் பிறந்தவர் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் முனிவர் வால்மீகியும் இங்கு தான் பிறந்தார். ஆனால் இந்த வரலாறு திருத்தப்பட்டுவிட்டது. அதை சரி செய்ய வேண்டிய நேரம் நமக்கு வந்துள்ளது என அவர் பேசினார்.