பசுமாட்டை தழுவினால் மனம் அமைதியாகிறது.! அமெரிக்காவின் பரவிவரும் சிகிச்சை முறை.! 

பசுமாட்டை தழுவினால் மனம் அமைதியாகிறது.! அமெரிக்காவின் பரவிவரும் சிகிச்சை முறை.! 

பசுமாட்டை தழுவினால் மனம் அமைதியாகிறது என்று அமெரிக்காவில் பசுமாட்டை கட்டிதழுவும் சிகிச்சை சில இடங்களில் நடந்து வருகிறது. 

பசுமாட்டை தழுவினால் மனம் அமைதியாகிறது, மன அழுத்தத்தை போக்கி மனதை நேர்மையாகிறது என்று கூறி சில இடங்களில் பசுமாட்டை வளர்த்து அதை தழுவுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இந்தியர்கள் அதிகம் வாழும் இடங்களில் இது போன்ற சிகிச்சை முறைகள் பிரபலமாகி வருகின்றன.  

இந்த சிகிச்சைக்கு 1 மணி நேரத்துக்கு கட்டணம் 200 டாலர் என வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த சிகிச்சைக்கு எந்த அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை என்றும் உங்களுக்கு பிடித்த எந்த விலங்கை தழுவினாலும் உங்களுக்கு மனஅமைதி கிடைக்கும் என அமெரிக்காவின் முன்னணி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.