பொருளாதார நெருக்கடிக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்காது-அமைச்சரவை செய்தித் தொடர்பாளர்!

முன்னாள் குடியரசுத் தலைவர் கோத்தபய ராஜபக்ச முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ஆகியோருக்கு எதிரான பொருளாதார குற்றம் தொடர்பான மனுக்களை விசாரிப்பது என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்காது-அமைச்சரவை செய்தித் தொடர்பாளர்!

பொருளாதார நெருக்கடி சம்பந்தமாக வரலாற்றில் இருக்கும் புள்ளி விபரங்களை பரிசோதிக்கும் போது, அதற்கான பொறுப்பை அரசாங்கம் ஒன்றின் மீதோ அதன் தலைவர்கள் மீது மாத்திரமோ சுமத்த முடியாது என அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

ராஜபக்ச சகோதரர்கள் மீது விசாரணை

முன்னாள் குடியரசுத் தலைவர் கோத்தபய ராஜபக்ச முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ஆகியோருக்கு எதிரான பொருளாதார குற்றம் தொடர்பான மனுக்களை விசாரிப்பது என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இது சம்பந்தமாக அரசாங்க தகவல் துறையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனை கூறியுள்ளார்.

நீதிமன்றத் தீர்ப்பை ஏற்பார்களா?

ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புக்காக நாங்கள் காத்திருக்க வேண்டும். நீதிமன்றம் வழங்குத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள நாம் கடமைப்பட்டுள்ளோம். நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.

பொருளாதாரம் மற்றும் அதன் தன்மை குறித்து பார்க்கும் போது தற்பொது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் பொருளாதார அறிவியல் புரிதல் இருந்தால், அது பற்றிய வரலாற்றில் இருக்கும் புள்ளி விபரங்களை ஆராய்ந்தால் பொருளாதார நெருக்கடிக்கான பொறுப்பை ஒரு அரசாங்கத்தின் மீதோ அதன் தலைவர்கள் மீதோ சுமத்த முடியாது என்பதே எனது தனிப்பட்ட பொருளாதார ஆய்வு. அப்படி செய்ய முடியும் என்று தனிப்படட ரீதியில் நம்பமாட்டேன் என பதிலளித்துள்ளார்.