வடகொரியாவின் முதல் கொரோனா உயிரிழப்பு :1.87 லட்சம் பேர் தனிமைபடுத்தப்பட்டனர் !!

வடகொரியா நாட்டில் கொரோனா தொற்றால் முதல் முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வடகொரியாவின் முதல் கொரோனா உயிரிழப்பு :1.87 லட்சம் பேர் தனிமைபடுத்தப்பட்டனர் !!

கடந்த 2019ம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் தீவிரமாக பரவிய கொரோனா தொற்று இன்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக திவீரமாக உலக நாடுகள் தடுப்பூசியை செலுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். வடகொரியா அரசு தனது நாட்டில் கொரோனா தொற்று இல்லை என மறுத்து வந்தது.

இந்நிலையில் தற்போது அந்நாட்டில் நேற்று முதல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வடகொரிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து நாடு முழுவதும் கடுமையான தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று வடகொரியாவில் முதல் கொரோனா உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. வடகொரியாவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 6 பேரில் ஒருவருக்கு ஓமிக்ரான் வகை கொரோனா பாதித்துள்ளது. இதனையடுத்து 1,87,000 பேர் தனிமை படுத்தப்பட்டுள்ளதாக வடகொரியா அரசு தெரிவித்துள்ளது.