முதல் முறை சந்திக்க இருக்கும் இரு தலைவர்கள்..! உலக அளவில் எதிர்பார்ப்பை எற்படுத்திய பேச்சுவார்த்தை..!

இந்தோனேசியாவில் இன்று ஜி20 மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் இரு வல்லரசு நாடுகளின் தலைவர்கள் முதல் முறை சந்திக்க இருக்கின்றனர்.
ஜி20 மாநாடு:
இந்தோனேசியாவின் பாலி நகரில் இன்று 17 ஆவது ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு தொடங்கியுள்ளது. இந்த மாநாடு நவ.16 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த ஜி 20 மாநாடு "ஒன்றாக மீள்வோம், வலுவாக மீள்வோம்" என்ற கொள்கையின் அடிப்படையில் கூடுகிறது.
3 தலைப்புகள்:
இந்த ஜி 20 மாநாட்டில் சுகாதாரம், எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் நிதி பரிமாற்றம் ஆகிய 3 தலைப்புகளின் கீழ் மூன்று அமர்வுகள் இடம்பெறுகிறது. இந்த தலைப்புகளின் கீழ் உலக தலைவர்கள் விவாதிக்கவுள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜி20 இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தோனேசியாவுக்கு புறப்படுகிறார்.
இதையும் படிக்க: கூட்டணி மாறுகிறாரா ஸ்டாலின்?
அமெரிக்கா - சீனா:
இந்த ஜி 20 நாடுகளின் குழுவில் இடம்பெற்றுள்ள அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் தலைவர்களும் இந்த உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர். அமெரிக்கா சார்பில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடனும், சீனா சார்பில் அதன் அதிபர் ஜி ஜின்பிங்கும் பங்கேற்க உள்ளார்.
முதல் முறை சந்திப்பு:
ஜோ பைடன் அமெரிக்காவின் அதிபராக பதவியேற்று இரண்டு ஆண்டுகளில் முதல் முறை இரு தலைவர்களும் சந்திக்கவுள்ளனர். தைவான் விவகாரத்தில் அமெரிக்கா - சீனா இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. உக்ரைன் - ரஷ்யா போர் விவகாரத்திலும் இரு நாடுகளுக்கிடையே முரண்பாடுகள் காணப்படுகிறது.
எதிர்பார்ப்பு:
உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளாக திகழும் சீனாவும் அமெரிக்காவும் ஒருவர் மீது ஒருவர் பொருளாதார தடைகளை விதித்து இருக்கின்றன. இந்நிலையில், இரு நாடுகளின் பொருளாதார நிலை, பருவ நிலை மாற்றம், சர்வதேச விவகாரம் தொடர்பாக ஜோ பைடனும் மற்றும் ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சந்திப்பு உலக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.