போலந்தைத் தாக்கிய ரஷ்ய ஏவுகணை - இருவர் பலி!

போலந்தைத் தாக்கிய ரஷ்ய ஏவுகணை - இருவர் பலி!

போலந்தில் ரஷ்ய ஏவுகணை தாக்கி 2 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஜி20 மாநாட்டில் இருந்தபடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேட்டோ தலைவர்களுடன் ஆலோசனை.

ரஷ்யா ஏவுகணை:

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா அதனுடன் கடந்த பல மாதங்களாக தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் நேட்டோ உறுப்பு நாடுகளில் ஒன்றான போலத்தின் மீது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை, தாக்குதல் நடத்தியுள்ளது. 

Russian Missiles Reportedly Hit Poland Amid Ukraine War | World Report |  U.S. News

ஜோ பைடன் இரங்கல்:

இந்த தாக்குதலில் சிக்கி நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள பிரெஸ்வோடோவைச் சேர்ந்த இருவர் உயிரிழந்ததாக போலந்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக குறிப்பிட்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், போலந்து கிழக்கே தாக்குதலில் சிக்கி உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைக்கு போலந்துக்கு முழு ஆதரவை வழங்குவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

Poland missile strike: Biden says 'unlikely fired from Russia' | Top  updates | World News - Hindustan Times

இதையும் படிக்க: காதலியை 35 துண்டுகளாக வெட்டி வீசிய காதலன்...அளித்த வாக்குமூலம் என்ன?

அவசரக் கூட்டம்:

இந்தோனேசியாவில் ஜி20 உச்சிமாநாடு நடைபெற்று வரும் நிலையில், ஜி7 மற்றும் நேட்டோ நாட்டுத் தலைவர்களின் அவசரக் கூட்டத்தைக் கூட்டி, அதிபர் ஜோபைடன் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆரம்பத்தில் தாக்குதல் நடத்தியது ரஷ்யாவா என்பதில் உறுதியாக இல்லை என தெரிவித்துள்ள போலந்து அதிபர் ஆண்ட்ருசெஸ் டுடா, நேட்டோ நாடுகளின் உதவியை நாடியுள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் தாக்குதலை மறுத்துள்ள ரஷ்யா, வேண்டுமென்றே இவ்விவகாரம் தூண்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.