மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் “ரகசிய” கடிதமா? அதை திறக்க...

மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் ‘ரகசிய கடிதம்’ குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அது பற்றி மேலும் தகவல் தெரிய சில கட்டுப்பாடுகள் உள்ளனவாம்.
மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் “ரகசிய” கடிதமா? அதை திறக்க...
Published on
Updated on
1 min read

மகாராஜா, மகாராணி என்றாலே, பல ரகசியங்களும், மறைவான தகவல்களும் நிரைந்திருக்கும். ஆனால், அது குறித்து தெரிந்து கொள்ளும் ஆர்வமோ, நமக்கும் அதிகமாக இருப்பது தான் உண்மை. அப்படி, மறைந்த பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் “ரகசிய” கடிதம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதைத் திறக்க, மேலும் 63 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமாம். ஏன்? எனத் தெரிந்துக் கொள்ளலாம்.

மகாராணி எலிசபெத்திற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் மிகவும் நெருங்கிய உறவு இருக்கிறது என்பது அவரது 16 ஆஸ்திரேலிய பயணங்களே அத்தாட்சி. தனது நெருங்கிய உறவை மேலும் வெளிப்படுத்தும் வகையில், மகாராணி ரண்டாம் எலிசபெத் ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார். அந்த கடிதம், ஆஸ்திரேலியாவின் தலைநகர் சிட்னியின் மேயருக்கு எழுதப்பட்டதாக, ஆஸ்திரேலிய பிரதமர் ஆந்தொனி ஆல்பனீஸ் தெரிவித்துள்ளார்.

ஆனால், அந்த கடிதம் தற்போதைய மேயருக்கானது அல்ல என்றும், 2085ம் ஆண்டில் மேயராக இருப்பவருக்கானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பெரும் ஆச்சிரியம் உலக மக்களுக்கு உருவாகியுள்ளது. மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எழுதப்பட்ட அந்த கடிதமானது 1986ம் ஆண்டு, மகாராணி தன் கைப்பட எழுதியதாகவும் கூறப்படுகிறது.

அந்த கடிதத்தில் என்ன இருக்கிறது என்பது, மகராணிக்கும், அவரது உதவியாளருக்கு மட்டுமே தெரிந்ததாகவும் கூறப்படும் நிலையில், அந்த கடிதம், கண்ணாடி பேடைக்குள் பத்திரமாக வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறபடுகிறது. இதனை எழுதிய நாளில் இருந்து 99 ஆண்டுகள் கழித்து, அதாவது வருகிற 2085ம் ஆண்டு திறக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. மேலும், “அந்த கடிதத்தை திறக்கும் போது, அதில் உள்ள எனது கருத்துகளை, சிட்னியின் குடிமக்களுக்கு கேட்கும் படியாக் ஔரக்க படிக்க வேண்டும்” என்றும் அந்த கடிதத்தில் அறிவுருத்தப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

பிரிடிஷ் சாம்ராஜ்ஜியம் மட்டுமின்றி, உலகின் மற்ற சில நாடுகளிலும், தனது அரசாட்சியை நடத்தி வரும் நிலையில், பிரிடிஷ் மகாரானி இரண்டாம் எலிசபெத் தான், ஆஸ்திரேலியாவிற்கும் மகாராணியாக இருந்தார் என்பதும், சமீபத்தின் அரசர் பதவியேற்ற மூன்றாம் சார்லஸ் தற்போது ஆஸ்திரேலியாவிற்கும் அரசரானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

80 ஆண்டு கால ஆட்சி செய்த மகாராணியின் இழப்பை உலகமெங்கும் வருந்தும் நிலையில், ஆஸ்திரேலிய அரசு தங்களது மகாராணிக்கு இரங்கல் வழங்கியதைத் தொடர்ந்து வெளியிட்ட இந்த செய்தியானது, உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com