மாயமான விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு - பயணித்த 6 பேரும் உயிரிழப்பு

ரஷ்யாவில் மாயமான விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் பயணித்த 6 பேரும் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாயமான விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு - பயணித்த 6 பேரும் உயிரிழப்பு

ரஷ்யாவில் மாயமான விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் பயணித்த 6 பேரும் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு கப்ரோவ்ஸ்க் நகரத்தில் இருந்து 38 கிலோ மீட்டர் தொலைவில் ஆன்டனோவ் ஆன்-26 ரக பயணிகள் விமானம், மாயமாகி விட்டதாக தூர கிழக்கு அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து, 70-க்கும் மேற்பட்ட மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் மாயமான விமானத்தின் சிதைவுகள், கப்ரோவ்ஸ்க் பகுதியில் உள்ள ஸ்பார்டக் ஸ்கை ரிசார்ட்டுக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, அந்த விமானம் விபத்தில் சிக்கியதும், அதில் பயணித்த 6 பேரும் பலியாகி விட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மோசமான வானிலையே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.