பிரசவ வலியில் சைக்கிளில் சென்று மருத்துவமனையில் சேர்ந்த பெண் எம்.பி..!

நியூசிலாந்தில் நடந்த ஆச்சரிய நிகழ்வு..!

பிரசவ வலியில் சைக்கிளில் சென்று மருத்துவமனையில் சேர்ந்த பெண் எம்.பி..!

தமிழ்நாட்டுல ஒரு ஏரியா கவுன்சிலருக்கு காய்ச்சல் வந்தாலே இருக்கின்றதிலேயே அதிக தொழில்நுட்பத்துடன் கூடிய பெரிய மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அப்படியிருக்க ஒரு மத்திய அமைச்சருக்கு உடல் நிலை சரியில்லை என்றால், நாட்டின் சிறந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை கொடுக்க நேராக வீட்டிற்கே வந்து விடுவார்கள். ஆனால் நியூசிலாந்தில் மத்திய அமைச்சராக உள்ள ஒரு பெண்மணி தன்னுடைய பிரசவ வலியில் சைக்கிள் ஓட்டிச் சென்று மருத்துவமனையில் தானே அனுமதியாகி, குழந்தை பெற்றெடுத்து இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?

ஆம்... நியூசிலாந்து நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜூலி அனே ஜென்ட்டர் என்பவர் பசுமை கட்சியை சேர்ந்தவர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜூலிக்கு, திடீரென 28.11.2021 அன்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அந்நேரத்தில் யாருக்கும் தெரியாமல், தன்னுடைய சைக்கிளை எடுத்துக் கொண்டு அவரே மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவமனையில் அனுமதியான 10 நிமிடத்திலேயே அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. "பிரசவத்தின்போது சைக்கிளை ஓட்டி செல்வேன் என்று நிஜமாகவே நினைக்கவில்லை.. அப்படி ஒரு பிளானே கிடையாது.. திடீரென வலி வரவும், நானே கிளம்பி போய்விட்டேன்.. அதிகாலை 3.04 மணிக்கு எங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினரை வரவேற்றோம்.. இதோ, மகிழ்ச்சியான எங்கள் குழந்தை பக்கத்திலேயே தூங்குகிறது.. அப்படியே அவள் போலவே..." என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ஆனால் இது ஜூலிக்கு புதிது அல்ல. ஆம் தன்னுடைய முதல் குழந்தை வயிற்றில் இருக்கும் போதும், இதே போல் பிரசவ வலி ஏற்பட்ட போது, பைக்கில் சென்று மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். இரண்டாவது குழந்தைக்கு சைக்கிளில் சென்று மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.