ஆபத்து இருக்குத்தான்.. ஆனா வீட்டில் சும்மா இருப்பதும் வேஸ்ட்… தன்னார்வலர்களாக மாறிய இளம்பெண்களுக்கு ராயல் சலியூட்!!

ஆபத்து இருக்குத்தான்.. ஆனா வீட்டில் சும்மா இருப்பதும் வேஸ்ட்… தன்னார்வலர்களாக மாறிய இளம்பெண்களுக்கு ராயல் சலியூட்!!

கொரோனா காலக்கட்ட ஆபத்தையும் பொருட்படுத்தாது, பெங்களூருவை சேர்ந்த இரு இளம்பெண்கள் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவது பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.

கொரோனா 2வது அலை இந்தியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. பல கோடி மக்கள் நோய் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். பாதிப்பு குறையாதா என நோயாளிகளும், உறவினர்களும் கவலையுடன் இருக்கின்றன. உயிரிழப்புகளும் மக்களை அதிர்ச்சியடை வைத்து வருகிறது.

இதேபோல் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா நோயாளிகள் பலரும் உயிரிழந்து வருகின்றனர்.  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நோயாளிகளை முறையே அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. சடலங்களை எரிக்கவும் கடும் திண்டாட்டம் நிலவி வருகிறது. மேலும் நோயாளிகளின் உடல்களை மயானத்துக்கு கொண்டு செல்லவும் யாரும் முன்வருவதில்லை.

இந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நோயாளிகளை மயானத்துக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யும் சேவையில் பட்டப்படிப்பு பயிலும் மாணவி நிக்கோல் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவி டினா ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். தினந்தோறும் 5 மணி நேரத்துக்கும் அதிகமாக கல்லூரி மாணவிகள் இருவரும் ஈடுபட்டு வருவது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

இதுகுறித்து பதிலளித்துள்ள மாணவிகள், தங்களது குடும்பத்தினர் இந்த தொழிலை செய்து வருவதாக கூறியுள்ளனர். கொரோனா தொற்று காலத்தில் வெளியே செல்வது ஆபத்து தான் என்றாலும், வீட்டில் சும்மா இருப்பதைவிட மற்றவர்களுக்கு உதவுவது மகிழ்ச்சியை தருவதாக  அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர்களது சேவை தொடர வேண்டும் எனவும், பாதுகாப்புடன் இந்த சேவையை மேற்கொள்ளவும் பலரும் பாராட்டி வருகின்றனர்.