இரண்டாவது பெரிய ஆசியப்பணக்காரரான அதானி,..முதல் இடத்தில் தொடரும் அம்பானி..!

இரண்டாவது பெரிய ஆசியப்பணக்காரரான அதானி,..முதல் இடத்தில் தொடரும் அம்பானி..!

ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரனாக உருவாகியிருக்கிறார் குஜராத்தை சேர்ந்த அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவை சேர்ந்த தொழில்அதிபர்களாக முகேஷ் அம்பானி, மற்றும் கெளதம் அதானி ஆகியோரின் சொத்துமதிப்பு உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டு முகேஷ் அம்பானி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரனாக உருவெடுத்தார். அதோடு உலக பணக்காரர்கள் வரிசையில் முதல் 10 இடங்களுக்கு முன்னேறினார்.

அவரைப் போலவே கெளதம் அதானியின் சொத்து மதிப்பும் பல மடங்கு உயர்ந்து வந்தது. இந்நிலையில் ப்ளூம்பெர்க் இதழ் ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் 76.5 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் முதல் இடத்தில அம்பானி தொடர 66.5 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் அதானி இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

அதேபோல உலக பணக்காரர்கள் பட்டியலில் அம்பானி 13ம் இடத்தில தொடர, அதானி 14ம் இடத்திலும் இருக்கின்றனர்.