இந்தியா
இந்திய சுகாதாரத் துறையின் மீது நம்பிக்கை அதிகரிப்பு – பிரதமர் மோடி பெருமிதம் ;

இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளுக்கு சர்வதேச அளவில் தேவை அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
எதிர்காலத்தில் சுகாதாரத்துறையில் சந்திக்க வேண்டிய சவால்களுக்கு நாம் தயாராக வேண்டியதன் அவசியத்தை கொரோனா தொற்று கற்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
உலகளவில் இந்திய சுகாதாரத்துறையின் மீதான நம்பிக்கை புதிய உயரத்தை தொட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, 2025ம் ஆண்டிற்குள் இந்தியாவில் இருந்து காசநோயை முற்றிலும் ஒழிப்பதே நமது குறிக்கோள் எனவும் தெரிவித்தார்