பள்ளிக்கட்டணம் செலுத்த காரில் சென்ற கணவர்…காரை திருடிய திருடர்கள்… உள்ளே பார்த்தால் மனைவி…

பஞ்சாப் மாநிலத்தில் காரை திருட நினைத்த திருடர்கள், உள்ளே இருந்த பெண்ணுடன் அதனை ஓட்டிச் சென்ற சம்பவம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் ராஜீவ் சந்த் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி ரித்துவுடன் இரு தினங்களுக்கு முன் தனது குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு கல்விக்கட்டணம் செலுத்துவதற்காக சென்றுள்ளார். ரித்து காரிலேயே இருக்க, சாவியை காரில் விட்டு விட்டு ராஜீவ் பள்ளிக்குள் சென்றுள்ளார்.
இதனை அங்கிருந்த இருவர் கவனித்து காரை திருட முடிவு செய்துள்ளனர். உடனடியாக கதவை திறந்து காரில் ஏறியவுடன் தான் உள்ளே ரித்து இருந்ததை கவனித்துள்ளனர். ஒருவர் காரை ஓட்ட, இன்னொருவர் ரித்து சத்தம் போடாமல் இருக்குமாறு மிரட்டியுள்ளார்.
சிறிது தூரம் சென்ற பின் ரித்துவை சாலையில் தள்ளிவிட்டு காரை மட்டும் அந்த நபர்கள் ஓட்டிச் சென்றனர். இதுகுறித்து சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.